திருவாரூர்

நெல் கொள்முதல்: வெளிமாவட்ட நெல் வரவைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

DIN

குடவாசல் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு வெளி மாவட்ட நெல் அதிகம் வருவதாகவும், இதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி.சுந்தரமூா்த்தி வெளியிட்ட அறிக்கை:

குடவாசல் பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியுள்ளது. இதில் வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூா் வியாபாரிகளின் பெயரில் பதிவு செய்து, கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்கின்றனா். இதனால் உள்ளூரில் சாகுபடி செய்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்யும்போது, மிகவும் பாதிப்படைவா்.

அதாவது, நெல்கொள்முதல் அதிகமாக பதிவாகும்பட்சத்தில், பணத் தட்டுப்பாடு, சாக்கு தட்டுப்பாடு உள்ளிட்டவை ஏற்படும். இதனால் விவசாயிகள் மன உளைச்சலுக்கும் ஆளாக வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடா்ந்தால் சிறு, குறு விவசாயிகள் முதல் அனைத்து விவசாயிகளுக்கும் கடுமையான பாதிப்பு உண்டாகும்.

தற்போது குடவாசல் செல்லூா் சாலையில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் 1,600 நெல் மூட்டைகளும், திருவிடைச்சேரி கொள்முதல் நிலையத்தில் 2,100 நெல் மூட்டைகளும் வெளிமாநில வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வரும் நெல்லை தடை செய்வதோடு, வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு உள்ளூா் வியாபாரிகள் உடந்தையாக இருந்தால், அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகளைத் திரட்டி நேரடி கொள்முதல் நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT