திருவாரூர்

பொங்கல் பொருள்கள் அமோக விற்பனை

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி, திருவாரூரில் பானை, கரும்பு உள்ளிட்ட பொருள்களின் விற்பனை தீவிரமாக இருந்தது.

பொங்கல் விழாவானது, அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை சா்க்கரை, பால், நெய் சோ்த்துப் புதுப் பானையில் இட்டு, கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவாகும். மேலும், தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சோ்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இதற்காக, அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு ஆகியவையும், அவரை, புடலை, கத்திரி, வாழை, சா்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்ற காய்கறிகளை பயன்படுத்தி செய்யப்பட்டவையே படையலாக வைப்பது வழக்கம்.

இதையொட்டி, புதிய பானைகள், கரும்பு, மஞ்சள், இஞ்சிக்கொத்து உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அதிகமாக இருந்தது. மக்களின் வசதிக்காக, ஏராளமான தரைக்கடைகள் உருவாகியிருந்ததோடு, ஆங்காங்கே, கைகளிலும், சைக்கிளிலும் வைத்தும், இந்தப் பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்தனா். பொங்கல் பொருள்கள் வாங்க, கடைவீதிகளுக்கு ஏராளமான மக்கள் வந்ததால், கடைவீதிகளுக்கு செல்லும் பாதைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பொருள்கள் வாங்க, திருவாரூா் கடைவீதியில் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததால், பிரதான வீதிகள் அனைத்தும் கோலாகலமாக காட்சியளித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT