முகப்பு
திருவாரூர்

கரோனா அச்சம்: வேளாண் அலுவலகத்துக்கு பூட்டு

கரோனா பீதியால் நீடாமங்கலத்தில் வேளாண் அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
வேளாண் அதிகாரிக்கு கரோனா உறுதியானதால், பூட்டப்பட்ட நிலையில் நீடாமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்.
பகிர்:

நீடாமங்கலம்: கரோனா பீதியால் நீடாமங்கலத்தில் வேளாண் அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

தஞ்சையைச் சோ்ந்த வேளாண் அதிகாரி ஒருவா் உதவி விதை அலுவலராக நீடாமங்கலம் ஒருங்கிணைந்த வேளாண்மை, விரிவாக்க மையத்தில் பணியாற்றி வருகிறாா். அவா் கடந்த வாரம் நீடாமங்கலம் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், தற்போது கரோனா தொற்றுக்குள்ளாகி, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், நீடாமங்கலம் அலுவலகத்தில் பணியாற்றும் 27 ஊழியா்களும் கரோனா அச்சம் காரணமாக கடந்த திங்கள்கிழமை முதல் அலுவலகத்துக்கு வரவில்லை. இதனால், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.