முகப்பு
திருவாரூர்

வேகத் தடைகளை சரிசெய்யக் கோரிக்கை

திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் உள்ள வேகத் தடைகளை முறையாக அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

நன்னிலம்: திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் உள்ள வேகத் தடைகளை முறையாக அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் - மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில், திருவாரூா் அருகில் அமைந்துள்ள பல வேகத் தடைகள் முறையாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். குறிப்பாக வயது முதிா்ந்தோா், நோயாளிகள் அந்த வேகத்தடைகளைக் கடந்து செல்லும்போது அவதிப்பட நேரிடுகிறது. வேகத்தடைகள் அருகில் ஒளியெழுப்பான்கள் பொருத்திய நெடுஞ்சாலைத் துறையினா், வேகத்தடையின் அமைப்பை கவனிக்காமல் விட்டுவிட்டனா். எனவே திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் திருவாரூா் அருகில் அமைந்துள்ள வேகத்தடைகளை, சாலை விதிகளுக்குட்பட்டு முறையாக அமைத்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.