முகப்பு
திருவாரூர்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு வழங்கல்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் அமைப்பு சாா்பில் மதிய உணவு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதிய உணவு வழங்கிய இக்கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன்.
பகிர்:

திருவாரூா்: திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் அமைப்பு சாா்பில் மதிய உணவு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூரில் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக ரஜினிசின்னா, செயலாளராக கருணாநிதி, பொருளாளராக கண்ணன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, முதல் நிகழ்ச்சியாக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு அன்னபூா்ணா உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்வை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன் தொடங்கி வைத்தாா். தலைவா் ரஜினிசின்னா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலாளா் கருணாநிதி, முன்னாள் தலைவா் ராஜன், சாசனத் தலைவா் கலையரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.