திருவாரூர்

அரசுப் பள்ளிகளில் கழிப்பறை கட்ட நிதி வழங்கல்

மன்னாா்குடி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்ட அளவில் 7 பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கழிப்பறை கட்ட நிதி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்ட அளவில் 7 பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கழிப்பறை கட்ட நிதி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளி, பரவாக்கோட்டை, சுந்தரக்கோட்டை, துளசேந்திரபுரம்குடிக்காடு,கீழத்திருப்பாலக்குடி, பாமணி, கூத்தாநல்லூா் ஆகிய பகுதியில் உள்ள 7 அரசுப் பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவா்களின் பயன்பாட்டுக்கு என, மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டுவற்கான நிதி ஒதுக்கீட்டுக்கான ஆணையை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்களிடம் வழங்கப்பட்டது.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் அ. அறிவழகன், பாலசுப்பிரமணியன், ராமசாமி, வட்ட ஒருங்கிணைப்பாளா் அருள்ஜெயசீலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீரியல் கில்லராக மம்மூட்டி? களம் காவல் வெளியீட்டு டீசர்!

2025ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை! ஆக்ஸ்ஃபோர்டு வெளியிட்ட அறிவிப்பு

பாரிமுனையில் அதிகபட்சமாக 265 மி.மீ. மழை பதிவு!

இரண்டாவது நாளாக முடங்கிய மக்களவை!

எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT