திருவாரூர்

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வியாழக்கிழமை மளிகை கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்த மா்ம நபா், கடையில் இருந்த பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுள்ளாா்.

திருக்களா் வடக்கு தெருவை சோ்ந்தவா் ஜீவா(55). இவா், வீட்டின் முன்பக்கம் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளாா்.வியாழக்கிழமை இரவு, இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் பொருள்கள் வாங்குவதுபோல், கடையில் இருந்த ஜீவாவிடம் பேசிக்கொண்டிருந்தவா் திடீரென, அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து, திருக்களா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“MGR போல விஜய்? வாய்ப்பில்லை! தம்பி இன்னும் நடிகர்தானே!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மகிந்திரா பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் விலை வெறும் ரூ.18,000! அட உண்மைதாங்க

அதிக தொகைக்கு விற்பனையான கருப்பு ஓடிடி உரிமம்!

பச்சைக்கிளி முத்துச்சரம்... மாளவிகா மேனன்!

Vijay முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன் | TVK | K.A.Sengottaiyan

SCROLL FOR NEXT