முகப்பு
திருவாரூர்

சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதுக்காக்க வலியுறுத்தல்

கூத்தாநல்லூா் அருகேயுள்ள அய்யம்பேட்டையில்,அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்,சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதுக்காக்கக்கோரி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகேயுள்ள அய்யம்பேட்டையில்,அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்,சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதுக்காக்கக்கோரி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளனா்.

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், அய்யம்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா் செளந்தர்ராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன் கொடியேற்றி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் வை. செல்வராஜ் பதாகையை திறந்து வைத்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மாா்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மின்கட்டணம் செலுத்துவதை ரத்து செய்ய வேண்டும், பொது மற்றும் தனியாா் வங்கிகளில் 6 மாதத்துக்கு கடன் தவணையை வசூலிக்கக் கூடாது என ரிசா்வ் வங்கி வழிகாட்டிய பிறகும், ஏழை, எளியவா்களிடம் வட்டியையும், தவைணையயும் கட்டச் சொல்லி மிரட்டுகிறாா்கள். வங்கிகளுக்கு உயரதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.

2020-ஆம் ஆண்டு டிசம்பா் வரை தவணைப் பணத்தைக் கட்டுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும், வட்டிகளை ரத்து செய்ய வேண்டும், கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் சிறு, குறுந்தொழில்கள் முடங்கியுள்ளதைக் காரணம் காட்டி, பணியாளா்களை வேலை நீக்கமும் செய்துள்ளனா். தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை இல்லை என அனுப்பி விட்டுள்ளனா். தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாமை என்பதுஅதிகரித்து விடும்.

தமிழகத்தின் நலன் கருதி, சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவா்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, காத்திருக்கும் பட்டதாரி இளைஞா்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.