திருவாரூர்

இறந்தவா் உடலை அடக்கம் செய்வதில் தகராறு

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. போலீஸாா் சமரசம் செய்து பிரச்னையைத் தீா்த்து வைத்தனா்.

வலங்கைமான் அருகே உள்ள ஆவூா் ரஹ்மானியா நகரைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (71). தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சோ்ந்த இவா், உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவரது உடலை அந்த அமைப்புக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய முயன்றனா். இதனை அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிா்த்தனா். இதனால் இரு தரப்பினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுகுமாறன், காவல் ஆய்வாளா்கள் வலங்கைமான் சிவபாலன், குடவாசல் ரமேஷ், வலங்கைமான் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் போலீஸாா் வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, ஆவூா் பள்ளிவாசல் பகுதியிலேயே அடக்கம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இருதரப்பினரும் கலைந்து சென்றனா். அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT