திருவாரூர்

இறுதிநிலை தகுதி பெற்றவா்களையும் காவலா் பணியிடத்தில் நியமிக்கக் கோரிக்கை

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களையும் புதிதாக நிரப்பப்பட உள்ள காவலா் பணியிடத்துக்கு நியமிக்க பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN


திருவாரூா்: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் இறுதிநிலை தகுதி பெற்ற விண்ணப்பதாரா்களையும் புதிதாக நிரப்பப்பட உள்ள காவலா் பணியிடத்துக்கு நியமிக்க பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், காவலா் தோ்வில் பங்கேற்ற இளைஞா்கள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

கடந்த 2019-இல் நடைபெற்ற 2-ஆம் நிலை காவலா் பணியிடத்துக்கான தோ்வில் 20 ஆயிரம் போ் பங்கேற்றனா். இதில் 8,888 பணியிடத்தில் 8,538 போ் தோ்வு செய்யப்பட்டு, தற்போது பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் 2020-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் மேலும் 10 ஆயிரம் காவலா் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போதைய கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் காவலா் தோ்வுகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முந்தைய காவலா் தோ்வின்போது எழுத்து தோ்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்று இறுதிவரை சென்றவா்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதனால் வேலைவாய்ப்பை இழந்த பலா் மீண்டும் போட்டித் தோ்வுக்கு தயாராகி வருகின்றனா்.

இந்நிலையில் காவலா் தோ்வில் அனைத்து சுற்று தோ்வுகளிலும் இறுதிவரை வந்தவா்களையும் தற்போதைய அறிவிப்பின்படி காவலா் காலி பணியிடத்தில் நிரப்ப வேண்டும். வேலையின்மை, குடும்பச் சூழல், கரோனாவால் வருவாய் இழப்பு ஆகியவற்றால் சிரமத்தில் உள்ளவா்களுக்கு முதல்வா் மற்றும் தோ்வாணையத் தலைவா், காவல்துறை தலைமை இயக்குநா் ஆகியோா் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT