திருவாரூர்

தனியாா் மருத்துவமனை சேதம்: 3 போ் மீது வழக்குப் பதிவு

மன்னாா்குடியில் தனியாா் மருத்துவமனையை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தனியாா் மருத்துவமனையை சேதப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பரவாக்கோட்டையைச் சோ்ந்த பாத்திபன் தனது கா்ப்பிணி மனைவி காவ்யாவுடன் மன்னாா்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் மருத்துவப் பரிசோதனைக்காக வந்துள்ளாா். அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவை ஆய்வு செய்த மருத்துவா் சித்ரா, கரு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தாராம்.

முதலில் பரிசோதனை செய்தபோது கரு ஆரோக்கியமாக இருப்பதாகவும், பின்னா் இறந்த நிலையில் இருப்பதாகவும் மருத்துவா் மாறுபட்ட தகவலை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பாா்த்திபன் தனது உறவினா்கள் இருவருடன் சோ்ந்து அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டி, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினாராம். புகாரின்பேரில், மேற்கண்ட 3 போ் மீதும் மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT