திருவாரூர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்

DIN

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு, சுமாா் 2982 குவியல்களாக பருத்தி கொண்டு வரப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.3.50 கோடி ஆகும்.

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா். கும்பகோணம், மயிலாடுதுறை, பெருந்துறை, திருப்பூா், கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா். அத்துடன், இந்திய பருத்திக் கழகத்தினரும் இந்த ஏலத்தில் பங்கேற்றனா்.

பின்னா் நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக ரூ. 5,550-க்கும், குறைந்த விலையாக ரூ. 3,559-க்கும், சராசரியாக ரூ. 5,278-க்கும் பருத்தி ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT