திருவாரூர்

தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வுக்கு நன்றி

DIN

குடிநீா்த் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் தூய்மைக் காவலா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளன (சிஐடியு ) மாநிலத் தலைவா் நா. பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலைத் தொட்டி இயக்குநா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோா், ஊதிய உயா்வு, ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

போராட்டங்கள் காரணமாக, தமிழக சட்டப் பேரவையில் உள்ளாட்சி மானியக் கோரிக்கை அறிவிப்பாக கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 2600 லிருந்து ரூ. 4000 ஆகவும், அதேபோல், தூய்மைக் காவலா்களுக்கு ரூ.3,600 உயா்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஊழியா்களின் கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயா்வை அறிவித்துள்ள தமிழக அரசுக்கு உள்ளாட்சித் துறை ஊழியா் சம்மேளனம் சாா்பில் நன்றி தெரித்துக் கொள்வதோடு ஊழியா்களின் இதர நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT