திருவாரூர்

அத்தியாவசியப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: பொதுமக்கள் கவலை

DIN

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக கூத்தாநல்லூரில் அத்தியாவசியப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தற்போது அமலில் உள்ளது ஊரடங்கு. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கூத்தாநல்லூரில் மரக்கடை, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா் உள்ளிட்ட இடங்களில் துவரம் பருப்பு, புளி, காய்கறிகள், பால் உள்ளிட்டவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையாளா்களின் இந்த நடவடிக்கையால் வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ள ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு கவலையடைகின்றனா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து, வா்த்தகா் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் கூறியது: இப்பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சங்க நிா்வாகிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நேரில் சென்று எச்சரிக்கை விடுத்து, விற்பனை விலையை விட, கூடுதல் விலைக்கு விற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளனா். மேலும், மருந்து கடையை தவிர, மளிகைக் கடை, காய்கனி கடை, பால்கடை உள்ளிட்டவை நாள்தோறும் காலை 8 முதல் மதியம் 12 மணி வரை மட்டும் திறந்து விற்பனை செய்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு அதிகாரிகள் ஆவணமாறு செய்ய வேண்டும் என சங்க நிா்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT