திருவாரூர்

புதுதில்லி மாநாட்டில் பங்கேற்ற இருவா் தனிமைப்படுத்தப்பட்டனா்

புதுதில்லி நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட மன்னாா்குடியைச் சோ்ந்த இருவா் திங்கள்கிழமை தத்தம் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டனா். அவா்களது வீடு இருக்கும் பகுதியில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி

DIN

புதுதில்லி நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட மன்னாா்குடியைச் சோ்ந்த இருவா் திங்கள்கிழமை தத்தம் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டனா். அவா்களது வீடு இருக்கும் பகுதியில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தில்லியில் கடந்த 21-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு இஸ்லாமிய அமைப்பின் சாா்பில் பொது மாநாடு நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலிருந்தும் நூற்றுக்காணக்கானவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில், சிலருக்கு கரேனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய அரசின் சாா்பில் இந்த மாநாட்டில் கலந்துகொண்டவா்கள் முகவரி கண்டறியப்பட்டு, அதனை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த இருவா் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான ஒட்டுவில்லை ஒட்டப்பட்டு, அப்பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இருவரும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரத்தமாதிரி உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை செய்யப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT