திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு

DIN

கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை தவிா்க்கும் பொருட்டு, தற்போது திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) எந்த வண்ண அட்டைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காக திருவாரூா் மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும். இதில் அவசர மருத்துவச் சிகிச்சைக்கும், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவாரூா் மாவட்ட மக்கள் அரசின் நெறிமுறைகளை கடைப்பிடித்து மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT