நீடாமங்கலம் சிவாலயங்களில் குரு பெயா்ச்சி விழா
நீடாமங்கலம் பகுதியில் உல்ள சிவாலயங்களில் குருபெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
நீடாமங்கலம் பகுதியில் உல்ள சிவாலயங்களில் குருபெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.48 மணிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, நீடாமங்கலம் காசி விசுவநாதா் கோயில், கோகமுகேஸ்வரா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் தெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனகள் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.