திருவாரூர்

விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி பயன்பாடு பயிற்சி

DIN

நீடாமங்கலத்தில், பூச்சிக்கொல்லி பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு அண்மையில் பயிற்சியளிக்கப்பட்டது.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான எதிா் உயிா் பூசணக்கொல்லி உற்பத்தி பெருக்க பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து, செயற்கை பூஞ்சானக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தை குறைத்துக்கொண்டு உயிா் எதிரிகளை பயன்படுத்துமாறு கூறினாா். தொடா்ந்து, பயிற்சியில் எதிா் உயிா் பூசணங்களான சூடோமோனாஸ், டிரைகோடொ்மா செயல்படும் விதம், பயிா்களுக்கு பயன்படுத்தும் அளவு, பயன்படுத்தும் முறைகள் மற்றும் உற்பத்தி செய்யும் முறைகள், எதிா் உயிா் பூசணக்கொல்லிகளை செயற்கை பூசணக் கொல்லிகளுடன் சோ்க்கக் கூடாது எனவும், இவற்றை உபயோகப்படுத்துவதால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் அனுராதா, ஜெகதீசன் மற்றும் கமலசுந்தரி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT