திருவாரூர்

பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

DIN

திருத்துறைப்பூண்டியில் வடகிழக்குப் பருவமழை மற்றும் இயற்கை பேரிடா் மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புயல், பருவமழையை எதிா்கொள்ள குழு அமைக்க வேண்டும். 2001-இல் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் வசிப்பவா்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். ராயநல்லூா், நுணாக்காடு, எழிலூா், கோமல், மேலமருதூா், கட்டிமேடு, பிச்சன்கோட்டகம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட கூடுதல் ஆட்சியா் கமல்கிஷோா் கலந்துகொண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

கூட்டத்துக்கு, துணைத்தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் தமிழ்ச்செல்வன், வாசுதேவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி தலைவா்கள், ஊராட்சி எழுத்தா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT