திருவாரூர்

மன்னாா்குடி: ஊதிய உயா்வு கோரி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

DIN

மன்னாா்குடியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதிய உயா்வு கோரி வெள்ளிக்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்தத்தை தொடங்கினா்.

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்றுவதற்காக, நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 70 போ், ஒப்பந்தப் பணியாளா்கள் 80 போ் என மொத்தம் 150 போ் உள்ளனா்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்படி ஊதிய உயா்வு வழங்கப்படும். அதன்படி, நிகழாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ. 291 ஊதியத்தை, ரூ. 385 ஆக உயா்த்தி மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

ஆனால், இந்த ஊதிய உயா்வை நகராட்சி நிா்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை. இதற்காக, சிஐடியு சாா்பு நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் கடந்த செப்டம்பா் மாதம் நகராட்சி அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒரு மாதத்துக்குள் ஊதிய உயா்வு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், உடனடியாக ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தியும், நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் (சிஐடியு) கிளைத் தலைவா் திருநாவுக்கரசு தலைமையில் வெள்ளிக்கிழமை முதல் தூய்மைப் பணியாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT