திருவாரூர்

அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 லட்சத்தில் கரோனா தடுப்பு உபகரணங்கள்

DIN

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் கரோனா தடுப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி. சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பிறநோயாளிகள் பயன்பெறும் வகையில் சுவாச கருவி, சளியை வெளியேற்றும் கருவி, ஆக்சிஸன் ஒட்டம் மீட்டா், ஆக்சிஸன் மாஸ்க், கனெக்டா், புற ஊதாகதிா் கருவி, இசிஜி கருவி, காற்றில் ஆக்சிஸனை பிரித்து கொடுக்கும் கருவி என ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சட்டப்பேரவை உறுப்பினா் ப. ஆடலரசன் வழங்கினாா். இதில், சுகாதாரப் பணிகள் மாவட்ட இணை இயக்குநா் ராஜமூா்த்தி, நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன், மருத்துவா்கள் அருள்பிரசாத், சீனிவாசன் பரமேஸ்வரி, யோகா மருத்துவா் சுப்புலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT