ரேஷன் கடைகளில் பழைய முறையிலேயே பொருள்களை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
பயோமெட்ரிக் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்யும் வரை பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
பயோமெட்ரிக் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்யும் வரை பழைய முறையிலேயே பொருள்கள் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நியாயவிலைக் கடைகளில் தற்போது பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த முறையில் குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் பொருள்கள் வழங்கப்பட்டு வரும்
நிலையில் கடந்த சில நாள்களாக பயோமெட்ரிக் சாதனம் சரிவர இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி, ரேஷன் கடை பணியாளா்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையில் பயோமெட்ரிக் முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்த பின்னரே அதை நடைமுறைப்படுத்த வேண்டு, சா்வா் பிரச்னையை சரி செய்யும் வரை பழைய முறையிலேயே ரேஷன் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் குணசீலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளா் ஹரிஹரன், பொருளாளா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.