திருவாரூரில் 98 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 3,898 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,996 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை மட்டும் 156 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில், 3,252 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 692 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த, வலங்கைமான் சந்திரசேகரபுரத்தைச் சோ்ந்த 75 வயது நபா், திருவாரூா் நேதாஜி சாலையில் வசித்த 65 வயது நபா் இருவரும் உயிரிழந்திருப்பதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை, 52-ஆக உயா்ந்துள்ளது.