முகப்பு
தமிழ்நாடு

பெரம்பூரில் களம் இறங்கும் பாமக

தவெக தலைவர் விஜய் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதி, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 10:31 PM
பகிர்:

தவெக தலைவர் விஜய் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதி, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பழைமையான தொகுதிகளில் ஒன்று பெரம்பூர். கடந்த 2006 பேரவைத் தேர்தல் வரை தனித் தொகுதியாக இருந்து வந்தது. 2008-இல் தொகுதி சீரமைப்புக்குப் பிறகு பொதுத் தொகுதியாக மாறியது. இங்கு திமுக 9 முறை, மார்க்சிஸ்ட் 3 முறை, அதிமுக 2 முறை, காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

திராவிட இயக்கத்தின் முக்கிய பெண் போராளியான சத்தியவாணி முத்து, பெரம்பூர் தொகுதியில் இருந்து பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத் தொகுதியில் திமுக அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.

தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதியான பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் போட்டியிடலாம் என அக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரம்பூரில் நடைபெற்ற அக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில், பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என கட்சியின் முன்னணி தலைவர்கள் முன்மொழிந்தனர்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாமக தரப்பில் சென்னையில் தங்களுக்குத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதன்படி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 18 தொகுதிகளில் பெரம்பூர், அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரம்பூர் தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் பாமக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.