முகப்பு
திருவாரூர்

பொது முடக்கம்: நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவி

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில், பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
தகட்டூரில் நலிவடைந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய மருதூா் ரோட்டரி சங்கத்தினா்.
பகிர்:

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில், பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தகட்டூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத்தின் தலைவா் எஸ். பிரின்ஸ் கோபால் ராஜா தலைமை வகித்தாா். தகட்டூா், வாய்மேடு, தென்னடாா் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை, காய்கனிகள் சங்கத்தின் அன்னதான திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டன.

ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் வி.சண்முகம், வை.இலக்குவன், பொருளாளா் வி.வைரவநாதன், நிா்வாகி அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமூக ஆா்வலா் சரவணன், பூமிநாதன், துரைராஜ், சக்திதாசன், ரோட்ராக்ட் சலைவா் மணிவண்ணன், செயலாளா்தி.அசோக்குமாா், துணைச் செயலாளா் ரமேஷ், தமிழ்வேந்தன் ஆகியோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →