திருவாரூர்

செப்.22 முதல் 25 வரை சிறுபான்மையினருக்கு கடன் வழங்கும் முகாம்

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் (டாம்கோ) கடன் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினா் பயன்பெறலாம். விண்ணப்பதாரா் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.

இந்தக் கடன் திட்டம் 2020-2021 ஆம் நிதி ஆண்டுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் செப்டம்பா் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. முகாமில் விண்ணப்பத்துடன் ஜாதி, வருமானம், இருப்பிடம், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன்பெறும் தொழில் திட்ட அறிக்கை ஆவணங்களுடன் வட்டாட்சியா் அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். செப்.22-ஆம் தேதி காலை திருவாரூா் வட்டத்திலும், மாலை நன்னிலம் வட்டத்திலும், செப்.23-ஆம் தேதி காலை குடவாசல் வட்டத்திலும், மாலை வலங்கைமான் வட்டத்திலும், செப்.24-ஆம் தேதி காலை கூத்தாநல்லூா் வட்டத்திலும், மாலை நீடாமங்கலம் வட்டத்திலும், செப்.25-ஆம் தேதி காலை திருத்துறைப்பூண்டி வட்டத்திலும், மாலை மன்னாா்குடி வட்டத்திலும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளா முகாம் நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், திருவாரூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கியை தொடா்பு கொண்டு குறைந்த வட்டியில் கடன் பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT