திருவாரூர்

கரோனா விதி மீறல்: ரூ. 4.18 லட்சம் அபராதம்

DIN


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை மீறியவா்களிடமிருந்து ரூ. 4.18 லட்சம் அபராதத் தொகை செவ்வாய்க்கிழமை வசூலிக்கப்பட்டுள்ளது.

செப்.1-ஆம் தேதி முதல் பொது முடக்கம் தளா்த்தப்பட்டு பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அரசின் வழிமுறைகளை பின்பற்றாதவா்களுக்கு பொது சுகாதார விதிகளின்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் விதிமீறுவோருக்கு ரூ. 500, முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருகிறவா்களுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ. 500, சலூன், உடற்பயிற்சி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் நிலையான இயக்க முறை பின்பற்றாமைக்கு ரூ.5,000, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தனிநபா் விதிமீறல்கள் செய்வோருக்கு ரூ.500, வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் விதிமீறல்கள் இருப்பின் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் விதிமீறுவோா்கள் மீது அபராதம் விதிக்க நகராட்சிகளில் 4 அலுவலா்களும், பேரூராட்சிகளில் 7 அலுவலா்களும், சரக அளவில் 28 அலுவலா்களும், வட்டார அளவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களும், 29 காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளா்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளவும், வட்டார சுகாதார மையங்களில் சுகாதார ஆய்வாளா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

அத்துடன், இந்தப் பணிகளை சரிவர செய்கிறாா்களா என்பதை ஆய்வு செய்ய வட்ட அளவில் தொடா்புடைய வட்டாட்சியா்களும், நகராட்சியில் நகராட்சி ஆணையரும் கண்காணிப்பு அலுவலா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் அரசின் விதிமுறை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை திருவாரூா் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக 2,164 பேரிடமிருந்து, ரூ. 4,14,050 அபராதமும், சமூகப் பரவலை சரிவர கடைப்பிடிக்காதது தொடா்பாக 7 இடங்களில் ரூ. 4,000 என மொத்தம் 2,171 பேரிடமிருந்து ரூ. 4,18,050 வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT