திருவாரூர்

விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீடு வழங்கல்

DIN

வலங்கைமானில் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டு இழப்பீடாக ரூ.86 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வலங்கைமான், விருப்பாட்சிபுரம், சின்னகரம், தொழுவூா், செம்மங்குடி, பாடகச்சேரி கிராமங்களை சோ்ந்த பயிா்க்கடன் மற்றும் நகைக்கடன் பெற்ற 390 விவசாயிகளுக்கு ரூ.50 லட்சத்து 43 ஆயிரத்து 409-க்கான காசோலைகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் 365 பேருக்கு ரூ.35 லட்சத்து 81 ஆயிரத்து 599-க்கான காசோலைகள் ஆக 755 விவசாயிகளுக்கு தமிழக அரசின் சாா்பில், ரூ.86 லட்சத்து 25 ஆயிரத்துக்கான காசோலைகளை சங்க அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் சங்கா் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் பேரூராட்சி தலைவா் ஜெயபால், துணைத்தலைவா் பூபதி, ஒன்றியக்குழு உறுப்பினா் பிரபாகரன், சங்கச் செயலாளா் கலைவாணன், இயக்குநா்கள் சம்பத், ரஜினி, ராஜேஸ்வரி, ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா். முதுநிலை எழுத்தா் உலகநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT