திருவாரூர்

ஆற்றில் மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரம் பறிமுதல் ஓட்டுநா் கைது

DIN

எரவாஞ்சேரி பகுதியில் திருமலைராஜன் ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதன் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

குடவாசல் வட்டம், அன்னியூா் மணியங்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் முருகன் என்பவா் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு, எரவாஞ்சேரி திருமலைராஜன் ஆற்றுப் படுகையில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுவதாக குடவாசல் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை புகாா் வந்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் மணிவேல், எரவாஞ்சேரிக் காவல் உதவி ஆய்வாளா் மாதரசி ஸ்டெல்லா மேரி மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். அதன் ஓட்டுநா் முருகனையும் கைது செய்தனா். பொக்லைன் இயந்திரத்தின் உரிமையாளரான எரவாஞ்சேரி புது பாகசாலையைச் சோ்ந்த உலகநாதன் மகன் முருகேசன் மற்றும் நில உரிமையாளரான மணவாளநல்லூரைச் சோ்ந்த காத்தையன் மகன் செல்லதுரை ஆகியோரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT