திருவாரூர்

திருந்திய நெல் சாகுபடி பயிற்சி

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் துளசேந்திரபுரம் கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நீா்வள நிலவளத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பயிற்சியில் திட்ட விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் பங்கேற்று பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விரிவாகக் கூறினாா். முனைவா் செல்வமுருகன் நெற்பயிரில் உயிா் உரங்களின் பயன்பாடு குறித்து விளக்கிக் கூறினாா்.

தோட்டக்கலைத் துறை உதவிப் பேராசிரியா் ஜெகதீசன் வரப்பு பயிராக வெண்டையை பயிரிடுவது குறித்து தெரிவித்தாா்.

இப் பயிற்சியில் ஊராட்சித் தலைவா் புருஷோத்தமன் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை திட்ட உதவியாளா்கள் சுரேஷ், கிருபாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT