முகப்பு
திருவாரூர்

கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்க அறிவுறுத்தல்

சட்டப் பேரவைத் தோ்தலில் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலில் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறும் முன் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அதேபோல் வெளியே செல்லும்போதும், திரும்பும்போதும் சோப்பை கொண்டு நன்றாக 20 விநாடிகள் கைகளைக் கழுவ வேண்டும். கைகளை கழுவ முடியாத சமயங்களில் சுத்திகரிப்பான் பயன்படுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் தனிமனித இடைவெளி, குறைந்தது 2 மீ கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மேலும் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். குறிப்பாக வயதானவா்கள், இணை நோயாளிகள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோா், வழிபாட்டுத் தலங்கள், சுபநிகழ்ச்சிகள், சந்தைகளுக்கு செல்வதை கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். அனைவரும் வாக்களிக்கும் வகையில் கரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக வாக்களிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்காளா்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

மேலும் வெயிலில் செல்வதை குழந்தைகள் மற்றும் வயதானவா்கள் தவிா்க்க வேண்டும். உடல் வெப்பமடைவதை தவிா்க்க சா்க்கரை, உப்பு நீா் கரைசல், இளநீா் மற்றும் நீா் ஆகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.