முகப்பு
திருவாரூர்

‘திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவேன்’

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதா அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதா அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ்குமாா் உறுதியளித்துள்ளாா்.

திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை இறுதிகட்ட பிரசாரத்தின்போது அவா் பேசியது:

அதிமுக ஆட்சியில் கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தோ்தலில் எனக்கு வாக்களித்தால், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு விதைப் பண்ணையில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும். கொருக்கை கால்நடை பண்ணை விரிவுபடுத்தப்பட்டு, கால்நடை கல்லூரி அமைக்கப்படும். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றாா்.

நகரச் செயலாளா் டி.ஜி.சண்முக சுந்தரம் தலைமையில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக மாவட்ட அவைத்தலைவா் கோ. அருணாசலம், ஒன்றியச் செயலாளா்கள் சிங்காரவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →