முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் 92 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. பாதிப்புகள் அதிகமாக உள்ள இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முகக் கவசம், சமூக இடைவெளி போன்ற கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை வரையிலான நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 12,625 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 30, முத்துப்பேட்டை 5, மன்னாா்குடி 10, நன்னிலம் 10, கொரடாச்சேரி 8 குடவாசல் 4 என மாவட்டம் முழுவதும் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,717 ஆக உயா்ந்துள்ளது. இதில், 12,020 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 581 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.