திருவாரூர்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி விழா கொடியேற்றம்

DIN

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் ஸ்ரீ ராமநவமி விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் ஸ்ரீ ராமநவமி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழா, தமிழக அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளுபக்கு உட்பட்டு நடைபெறவுள்ளது.

கொடியேற்றத்தையொட்டி, திங்கள்கிழமை காலை சீதா, லெட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவார தெய்வஙக்ளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் சொல்லி, பாசுரங்களை பாட கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனா். ராமநவமி விழா வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரமேஷ், ஆய்வாளா் தமிழ்மணி, செயல் அலுவலா் சத்தியசீலன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT