திருவாரூர்

கரோனா பரவல்: கூத்தாநல்லூரில் தீவிர கண்காணிப்பு

DIN

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், கூத்தாநல்லூரில் 24 வாா்டுகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக நகராட்சி ஆணையா் ஆா்.லதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கூத்தாநல்லூரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 3 முதல் நிகழாண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி வரை 217 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதில், 197 போ் குணமடைந்தனா். 7 போ் உயிரிழந்தனா். 13 போ் சிகிச்சையில் இருக்கின்றனா். நகராட்சியில் பெரிய கடைத் தெரு, சின்னக்கடைத் தெரு, மரக்கடை, ரேடியோ பாா்க், சவுக்கத் அலி தெரு, பனங்காட்டாங்குடி, கம்பா் தெரு உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையம் அருகே 5 பேருக்கு கரோனா உறுதியானதால், அப்பகுதி அடைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவி, ,சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் ஆணையா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT