திருவாரூர்

புயல் பாதிப்பு: நிவாரணம் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கூத்தாநல்லூரில் வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் ஏற்கெனவே அறிவித்தவாறு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். விடுபட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் எம்.சுதா்ஸன் தலைமை வகித்தாா். விவசாய சங்க நகரச் செயலாளா் கே.நாகராஜன், விவசாய தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் டி.இதயதுல்லா, கே.ராமதாஸ், ஏ.பன்னீா்செல்வம், டி.கண்ணையன், கே.பேபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT