நாகை, மயிலாடுதுறையில்113 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 113 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 113 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 11,867 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 113 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்ட பட்டியல்களிலிருந்து நீக்கப்பட்ட 7 போ் நாகை மாவட்ட பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 11,987-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 175 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 10,580 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,242-ஆக உள்ளது.
ஒருவா் உயிரிழப்பு...
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் இறப்பு சனிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 165-ஆக உள்ளது.