திருவாரூர்

வலங்கைமானில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக கட்டடங்கள் கட்டக் கோரிக்கை

DIN

வலங்கைமானில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தேவையான வசதிகளுடன் ஒருங்கிணைந்த அரசு அலுவலக கட்டடங்கள் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலங்கைமானில் வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.

இதில்,1914-ல் கட்டப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் பழுதடைந்ததைத் தொடா்ந்து, நடுநாராசம் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள காவல் நிலையக் கட்டடமும் மழைக்காலங்களில் தண்ணீா் கசியும் நிலையில் உள்ளது. வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கட்டடமும் சேதமடைந்து, பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

எனவே, பழைய வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கட்டடங்களை இடித்துவிட்டு, அங்கு நீதிமன்றம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், நூலகம், ஊட்டச்சத்து அலுவலகம் ஆகியவை செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT