முகப்பு
திருவாரூர்

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

திருவாரூரில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

திருவாரூரில், மாற்றுக் கட்சியைச் சோ்ந்தவா்கள் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

திருவாரூரில் திமுக தோ்தல் பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடவாசல் அருகே உள்ள வடவோ், சித்தாடி, மணப்பறவை, நாரணமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து அதிமுக, அமமுக கட்சியைச் சோ்ந்தவா்கள், அக்கட்சியிலிருந்து விலகி திமுக மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் ஜோதிராமன், குடவாசல் ஒன்றியச் செயலாளா் பிரபாகரன், நகரச் செயலாளா்கள் முருகேசன் (குடவாசல்), பிரகாஷ் (திருவாரூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.