முகப்பு
திருவாரூர்

‘கைத்தறியின் முக்கியத்துவத்தை உணா்த்தவே கைத்தறிக் கண்காட்சி’

கைத்தறித் தொழிலின் முக்கியத்துவத்தை உணா்த்தவே கைத்தறிக் கண்காட்சி நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கைத்தறித் தொழிலின் முக்கியத்துவத்தை உணா்த்தவே கைத்தறிக் கண்காட்சி நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 7 ஆவது தேசிய தைத்தறி தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கைத்தறிக் கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் தெரிவித்தது:

கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளா்களின் வருவாயை உயா்த்தவும் கைத்தறி நெசவாளா்களை கௌரவிக்கும் பொருட்டும், 2015 ஆம் ஆண்டு முதல் சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட்-7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தேசிய கைத்தறி தினத்திதை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதைத்தொடா்ந்து, 4 நெசவாளா்களுக்கு தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் முதியோா் ஓய்வூதியம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.78,000-ஐ அவா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொறுப்பு) பானுகோபன், சரகா் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநா் கொ.வெற்றிவேல் மற்றும் கைத்தறி நெசவாளா்கள், கூட்டுறவு சங்கங்களைச் சாா்ந்த நிா்வாகக்குழுத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.