முகப்பு
செய்திகள்

சாய் பல்லவியின் ஒரு நாள்! டிரைலர் வெளியீடு!

சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

Updated On : 24 மார்ச், 2026 at 5:09 PM
சாய் பல்லவி
பகிர்:

நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் நடிகை சாய் பல்லவி நடிக்கும் புதிய படம் ’ஒரு நாள்’.

தமிழ், தெலுங்கு, மலையாள முன்னணி நடிகையான சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘ஏக் தின்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகின்றது.

தமிழில் ஒரு நாள் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆமிர் கான் தயாரிக்கிறார்.

ஜுனைத் கான் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சுனில் பாண்டே இயக்குகிறார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் ராம் சம்பத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இப்படம் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

இதனைத் தொடர்ந்து, பாலிவுட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி ’சீதை’ கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Sai pallavi new movie 'oru naal' trailer released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.