பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!
ஏக் தின் படத்தின் புதிய டிரைலர் வெளியாகியுள்ளது குறித்து...
நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள “ஏக் தின்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுனில் பாண்டே இயக்கும் “ஏக் தின்” படத்தின் மூலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகின்றார்.
பிரபல நடிகர் ஆமிர் கான் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜுனைத் கான் நாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்துக்கு இசையமைப்பாளர் ராம் சம்பத் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஏக் தின் திரைப்படத்தின் 2 ஆவது டிரைலரை படக்குழுவினர் வியாழக்கிழமை (ஏப். 16) அன்று வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே, இப்படத்தின் முதல் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் மே 1 அன்று “ஏக் தின்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகின்றது.
The trailer for the film "Ek Din," starring Sai Pallavi as the female lead, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.