வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்? மனம் திறந்த சாய் பல்லவி! நோட் பண்ணுங்கப்பா
வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மனம் திறந்தார் சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் அவர் வெளியிட்ட கருத்துகள் வைரலாகியிருக்கிறது.
விரைவில் வெளியாகவிருக்கும் ராமாயணா திரைப்படத்தில் சீதையாக நடித்திருக்கும் சாய் பல்லவி, அண்மையில் யார் அடுத்த கோடீஸ்வரர் 18 தொடரில் ராமயணா படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ரன்பீர் கபூர் மற்றும் ரவி தூபே ஆகியோருடன் பங்கேற்றார்.
அபிதாப் பச்சான் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவியிடம், அமிதாப், வருங்கால கணவரிடம் எந்த மாதிரியான குண நலன்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
உண்மையில், திருமணமாகாத இளைஞர்கள் பலரின் கனவுக் கன்னியாக இருக்கும் சாய் பல்லவியிடம் இந்த கேள்வி எழுப்பியதன் மூலம், பல இளைஞர்களுக்கு முக்கியமான அந்த விடை கிடைத்துவிட்டது.
அமிதாப் கேட்ட கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்த சாய் பல்லவி, உண்மையில் தனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை, முதலில் அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று சொன்னார்.
மேலும், தன்னுடைய கணவராக வருபவர், நல்ல மனிதராக இருப்பதோடு, அவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்ப்பவராக இருக்க வேண்டும். தன் செயல்களைத் தானே சரிபார்த்துக் கொள்பவராக இருக்க வேண்டும். அதாவது, வாழ்க்கையில் தான் இருக்கும் நிலையைப் பற்றிய ஒரு தெளிவு அவரிடம் இருக்க வேண்டும். அவர் தவறுகள் செய்யலாம், ஆனால் அதையும் அவர் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்காக அவர் மற்றவர்கள் மீது பழி போடுவதாக இருக்கக்கூடாது. இது ஒன்றும் பெரிய பட்டியல் இல்லை, ஆனால் அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும், மேலும் அவருக்குச் சமைக்கவும் தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறி புன்னகைத்தார்.
இந்தக் கால பெண்களின் வீடு, கார், சம்பளம் போன்ற மளிகைப் பட்டியல் போல இல்லாமல், நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று சாய் பல்லவி விவரித்தது அங்கிருந்தவர்களிடம் கரகோஷத்தைப் பெற்றுத் தந்தது.
மனிதர்களிடம் சிறந்த ஐந்து குணங்கள் இருக்க வேண்டும் என்று சாய் பல்லவி கூறியிருக்கிறார். இது தற்போது பேசுபொருளாகியருக்கிறது. இளைஞர்களிடையே இந்த கருத்து வரவேற்பையும் பெற்றுள்ளது.
தொடர்ந்து பேசிய சாய் பல்லவி, ஒரு புதிய படத்தை ஏற்கும் போதெல்லாம், ஒரு கதாபாத்திரத்திற்குத் தன்னால் என்ன பங்களிக்க முடியும் என்பதைப் பற்றியே பொதுவாக சிந்திப்பேன். ஆனால் சீதையாக நடித்தது, அந்த அனுபவத்தை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க எனக்கு தோன்றியது. அந்தப் பாத்திரத்தை தன்னால் எந்த அளவுக்கு சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதையும் தாண்டி, அந்த கதாப்பாத்திரத்திலிருந்து தன்னால் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று சிந்திக்கத் தொடங்கியதாகவும் கூறியிருக்கிறார்.
What should her future husband be like? Sai Pallavi opens up—take note, everyone!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.