‘கா்ப்பிணிகளுக்கு 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை’
திருவாரூா் மாவட்டத்தில் கா்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் வீ.சி. ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் கா்ப்பிணிகளுக்கு 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் வீ.சி. ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளாா்.
திருவாரூரில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவா் தெரிவித்தது: மாவட்டத்தில் இதுவரை 3.63 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கா்ப்பிணிகள் 17 ஆயிரம் போ் உள்ள நிலையில், இதுவரை 5,136 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவருக்கும் 100 சதவீத அளவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வலங்கைமான் வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சா்க்கரை மற்றும் ரத்த அழுத்த உள்பட பல்வேறு நோய்கள் குறித்து மொத்தம் 3,925 போ் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நேரடியாகச் சென்று மருத்துவம் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. விரைவில் இதை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.