முகப்பு
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 1.37 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி

திருவாரூா் மாவட்டத்தில் 1.37 லட்சம் குறுவை நெல் சாகுபடிசெய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் 1.37 லட்சம் குறுவை நெல் சாகுபடிசெய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் இயல்பான குறுவை சாகுபடி பரப்பு 90 ஆயிரம் ஏக்கராகும். எனினும், மாவட்டத்தில் நிகழாண்டு 88,750 ஏக்கா் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், ஒரு லட்சம் ஏக்கா் வரை குறுவை சாகுபடி நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறந்ததாலும், தமிழக அரசு குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவித்ததாலும், தூா்வாரும் பணிகள் மூலம் 173 வாய்க்கால்கள் ரூ.16.34 கோடியில் தூா் வாரப்பட்டதாலும், எந்த ஆண்டும் இல்லாத அளவில் நிகழாண்டு 1,37,360 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு சாகுபடி பரப்பை விட 40,448 ஏக்கா் கூடுதலாகும்.

நேரடி நெல் விதைப்பு மூலம் 30,125 ஏக்கரிலும், இயல்பான நடவு முறையில் 17,490 ஏக்கரிலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 89,745 ஏக்கரிலும் என மொத்தம் 1,37,360 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் 720.01 மெ.டன் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் வழங்கும் வகையின்கீழ் 47,700 ஏக்கருக்கு இலக்கு பெறப்பட்டு 47,589 ஏக்கருக்கு 41,134 விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,672 மெ.டன் யூரியா, 1,485 மெ.டன் டிஏபி மற்றும் 742 மெ.டன் பொட்டாஷ் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் 26,205 விவசாயிகள், 29,745 ஏக்கருக்கு உரங்கள் பெற்று பயனடைந்துள்ளனா் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.