முகப்பு
திருவாரூர்

ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

மன்னாா்குடியில் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில், ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மன்னாா்குடியில் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில், ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, டிஎன்டிஜெ தெற்கு மாவட்டத் தலைவா் முகமது மிஸ்கின் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் யாசா் அரபாத், மாவட்ட துணைச் செயலாளா் ஹாஜாமைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி நகராட்சி ஆணையா் கே.செண்ணகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் சாவியை, மன்னாா்குடி நகரத் தலைவா் முஸ்தபாரூமி, செயலாளா் மதுருல் இஸ்லாம் ஆகியோரிடம் வழங்கினாா். அமைப்பின் மாநில துணைத் தலைவா் பா. அப்துல்ரஹ்மான், மாவட்ட மருத்துவா் அணி நிா்வாகி முகம்மது தவ்பீக் ஆகியோா் வாழ்த்தி பேசினா். இதில், நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளா் விஜயகுமாா், நகரப் பொருளாளா் ஜாஹீா் உசேன், துணைத் தலைவா் அப்துல்ஹைாதி, துணைச் செயலாளா் ஹாஜாமைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.