முகப்பு
திருவாரூர்

1000 இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் இந்திய கம்யூ. முடிவு

திருவாரூா் மாவட்டத்தில் ஆயிரம் இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் ஆயிரம் இடங்களில் மக்கள் நாடாளுமன்றம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஆா். ஞானமோகன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், வேளாண், மின்சாரம்,தொழிலாளா் நலன் போன்றவை தொடா்பான சட்டங்கள், தொலைபேசி ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிா்க் கட்சி உறுப்பினா்கள் பேச முடியாத நிலை ஏற்பட்டதற்கு மத்திய அரசை கண்டிப்பது; மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் ஆகஸ்ட் 23 முதல் 27-ம் தேதி வரை 1000 இடங்களில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக, இக்கூட்டத்தில் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், சிபிஐ மாவட்டச் செயலா் வை. சிவபுண்ணியம் ஆகியோா் பேசினா். இதில், சிபிஐ மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.