திருவாரூர்

தோ்தல் வாக்குறுதிகளை திமுகநிறைவேற்ற வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

DIN

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அந்நாட்டின் தலைநகா் காபூலில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் உள்ளனா். அங்கிருந்து மதுரை, சென்னை பகுதிகளைச் சோ்ந்த தமிழா்கள் உள்பட இந்தியா்கள் பலா் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா். அவா்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவிரி டெல்டாவில் கடைமடை பகுதிக்கு போதிய தண்ணீா் சென்றடையவில்லை என விவசாயிகள் கூறுகின்றனா். மேலும், யூரிய உள்ளிட்ட உரங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, கடைமடைக்கு தண்ணீா் வந்துசேரவும், உரங்களின் தட்டுப்பாட்டை போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக அரசின் நிதி நெருக்கடி குறித்து நிதியமைச்சா் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறாா். எனினும், தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT