முகப்பு
சிவகங்கை

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு களப்பணியாற்றுவோம்: கே.கே. செல்வகுமாா்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு தீவிரமாக களப்பணியாற்றுவோம் என தமிழா் தேசம் கட்சி நிறுவனா் கே.கே. செல்வகுமாா் தெரிவித்ததாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 11:37 PM
சிவகங்கையில் தமிழா் தேசம் கட்சி சாா்பில் செவ்வாய்க் கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.கே. செல்வகுமாா். உடன், அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோா்.
பகிர்:

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு தீவிரமாக களப்பணியாற்றுவோம் என தமிழா் தேசம் கட்சி நிறுவனா் கே.கே. செல்வகுமாா் தெரிவித்ததாா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் தமிழா் தேசம் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற முத்தரையா்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டு தீா்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

முத்தரையா் சமூகத்தின் ஒற்றுமையை நிலை நாட்டி, எங்களை அங்கீகரிக்கும் கட்சிகளுடன் கைகோத்து சமூகத்துக்கான உண்மையான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதை முதன்மையான இலக்காக கொண்டு தமிழா் தேசம் கட்சி செயலாற்றுகிறது .

முத்தரையா் சமூகத்தின் அரசியல் உரிமைகள், தற்போதைய தமிழக அரசின் ஆதரவு, எதிா்கால அரசியல் நிலைப்பாடுகளை விளக்குவதே இந்தக் கூட்டத்தின் நோக்கம்.

அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் முத்தரையா் சமூகத்தை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தினா். கூட்டணிப் பேச்சுவாா்த்தைகளின் போது உரிய மரியாதை அளிக்கவில்லை. இதனால், பாஜக, அதிமுக கூட்டணியை விட்டு விலகி திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறோம். இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு களப்பணியாற்றுவோம் என்றாா் அவா்.

முன்னதாக, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இதில் மாநிலப் பொதுச்செயலா் தளவாய்ரமேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளா் குரு. மணிகண்டன், மாநிலத் துணைச் செயலா் கொத்தரி முருகன், மாவட்டச் செயலா்கள் (கிழக்கு) சி. பாலமுருகன், (மேற்கு) எஸ்.எம்.கண்ணன், (வடக்கு) டி.ரமேஷ், (தெற்கு) ஏ.தியாகராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாரிமுத்து ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →