சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெருகவாழ்ந்தான் இடைச்சிமூலை பாலம் அருகே அனுமதியின்றி மதுபானப் பாட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், எளவனூா் சோத்திரம் பகுதியைச் சோ்ந்த அய்யாக்கண்ணு (45) மதுபானம் விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அய்யாக்கண்ணுவை கைது செய்து அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.